# <strong>கரும்புச் சக்கையும் கை கொடுக்குது….! கட்டுரை: சேதுராமன் சாத்தப்பன் </strong>

உலகமே&nbsp; பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று வழி என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறது.&nbsp;

பாக்கு மட்டை தட்டுகள்,&nbsp; வாழை மட்டை&nbsp; தட்டுகள் போன்றவை புழக்கத்தில் இருந்தாலும் அவற்றில்&nbsp; உணவை வைத்து மைக்ரோவேவ் அவனில்&nbsp; சூடு படுத்த இயலாது.&nbsp;

மைக்ரோ அவனில் வைத்து உணவை சூடு செய்வதற்க்கு ஏற்றவாரும் , அதேசமயம் அந்த தட்டுக்கள் எளிதில் மக்குவதாகவும்&nbsp; இருக்க வேண்டும். கரும்பு சக்கை களிலிருந்து இதுபோன்ற உணவு பரிமாறும் தட்டுகள் போன்றவற்றைத்&nbsp; தயாரிக்கலாம்,&nbsp; இதை பயன்படுத்தி&nbsp; விட்டு, மண்ணில்&nbsp; தூக்கி எறிந்தால்&nbsp; 90 நாட்களுக்குள் மக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. இது மைக்ரோவேவ் அவனில்&nbsp; 20 டிகிரியிலிருந்து 140 டிகிரி&nbsp; வரை சுட வைக்கும் போது தாங்கும் சக்தியுடையதாக இருக்கிறது.

முன்னர் பிளாஸ்டிக் அதிகப்படியான உபயோகத்தில் இருந்த போது, இந்த தயாரிப்புகள் யாராலும் சீண்டப்படவில்லை. தற்போது பலர் சுற்றுபுற சூழலின் நன்மை கருதி உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.&nbsp;

கரும்புச்&nbsp; சக்கையை பயன்படுத்தி&nbsp; உணவு பரிமாற உதவும் டம்ளர், கப்கள், தட்டுகள், கிண்ணம் போன்ற ஒரு முறை பயன் படுத்தி&nbsp; தூக்கியெறியும் பொருட்களை தயாரிக்கலாம். இதை இந்தியாவில் பல கம்பெனிகள் தயாரிக்கின்றன.&nbsp;

ECOWARE, VISSAGE, CHUK போன்ற பல பிராண்டுகளில் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.&nbsp; மேலும்&nbsp; பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கரும்பு அதிகம் கிடைப்பதால்&nbsp; இதை ஒரு வாய்ப்புள்ள தொழிலாகவும் பார்க்கலாம்.&nbsp;