# கட்டாபுக் !

இன்று&nbsp; சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான்.&nbsp; விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும். &nbsp;

மனுஷனுடைய ஞாபகசக்திக்கு ஆயுள் மிகவும் குறைவான காலம் (memory is short) என்பதுதான் உண்மை. நமக்கெல்லாம் யானை மாதிரி ஞாபக சக்தி இருப்பது கஷ்டம்.&nbsp;

இந்தியாவில் எம்எஸ்எம்இ கம்பெனிகள் &nbsp;கிட்டத்தட்ட ஆறு கோடி&nbsp; இருக்கிறது. &nbsp;இந்த ஆறு கோடி கம்பெனிகள் பெரிய அளவில் கம்ப்யூட்டர் உபயோகிப்பது இல்லை.&nbsp;

இந்த சிறிய வியாபாரிகளுக்கு இருக்கும் இந்த சிரமத்தை&nbsp; போக்க &nbsp;ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி கட்டாபுக் ([www.khatabook.com](http://www.khatabook.com)) &nbsp;என்ற&nbsp; &nbsp;ஒரு செயலி தயார் செய்து&nbsp; இருக்கிறார்கள். &nbsp;இந்த கட்டாபுக் செயலியில் சிறு வியாபாரிகள்&nbsp; தங்களுடைய டிஜிட்டல் லெட்ஜரை வைச்சுக்கலாம். இந்த வகையில் அவர்களுக்கு உதவும் விதமாக இந்த செயலி இருக்கிறது. &nbsp;

அதாவது ஒரு மளிகை கடைக்காரர் யார் யாருக்கு கடன் கொடுத்து இருக்கிறார் என்பதை அவருடைய லெட்ஜரில்&nbsp; குறித்து வைத்து கொள்ள முடியும்.&nbsp; இந்த &nbsp;செயலியை அறிமுகப்படுத்தியதும்&nbsp; உடனடியாக ஒரு கோடி மக்கள் அதை டவுன்லோட் செய்து&nbsp; இருக்கிறார்கள். &nbsp;

&nbsp; உதாரணமாக ஒரு மளிகை கடைகாரருக்கு மாதம் 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து &nbsp;வர வேண்டி இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அவரின் &nbsp;வாடிக்கையாளர்கள் 600 பேர் என்று எடுத்துக்கொண்டால், அவரால் அந்த கணக்கு வழக்குகளை சமாளிப்பது மிகவும் கடினம். &nbsp;இந்த கட்டாபுக் செயலியில் அனைத்தையும் பதிந்து வைப்பதன் மூலம்&nbsp; அவருடைய மளிகைக் கடையின் டிஜிட்டல் லெட்ஜரை மேனேஜ் செய்ய முடிகிறது. அவருக்கு&nbsp; வரவேண்டிய நிலுவை தொகைகள் முறையாக வசூலாக வழி வகுக்கிறது.&nbsp;

இதில்&nbsp; நீங்கள் பதிந்து வைத்த&nbsp; உங்களுக்கு வர வேண்டிய கடன்கள், &nbsp;நீங்கள் திரும்ப கொடுக்க வேண்டிய கடன்கள் குறித்து அந்த குறிப்பிட்ட தேதிக்கு ரிமைண்டர் அனுப்புகிறது.&nbsp;

&nbsp; சென்று பாருங்கள் உங்களுக்கு உபயோகமான செயலி ஆகும். [www.khatabook.com](http://www.khatabook.com)