# இனி இங்கு உட்கார்ந்தபடி துபாயிலும் விற்கலாம்.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் அதிகம் உள்ளது ஐக்கிய அரபு நாடுகள் தான்.&nbsp; அங்கிருக்கும் இந்திய மக்களை குறிவைத்து&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; எப்படி விற்பனை செய்வது என்று பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கும்&nbsp; &nbsp; &nbsp; போது,&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அமேசான் இந்தியா&nbsp; ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் இந்திய &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே இந்தியாவிலிருந்து உங்கள் பொருட்களை விற்கும் வசதியை கொண்டுவந்துள்ளது.&nbsp; அப்படி நீங்கள் விற்கும் பொருட்கள்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஏற்றுமதி என்ற &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.&nbsp;

&nbsp;ஐக்கிய அரபு நாடுகளில் எதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்க்கும் போது&nbsp; தங்க &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஆபரணங்கள், வைர ஆபரணங்கள், ஆடைகள், அழகு சாதனப் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; பொருட்கள், மளிகை சாமான்கள்&nbsp; ஆகியவற்றிர்க்கு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அமேசான் யுஏஇ அங்கு&nbsp; &nbsp; &nbsp; முன்பு பிரபலமாக இருந்த சூக்&nbsp; (Souk) என்ற கம்பெனியை&nbsp; 2017 ஆம் &nbsp; &nbsp; வருடம் கையகப்படுத்தியுள்ளது.&nbsp; இதனால் பலலட்சக்கணக்கான&nbsp; &nbsp; வாடிக்கையாளர்கள் அமேசான் யூஏஇ க்கு அப்படியே மாறி இருந்தார்கள்.&nbsp;

வெளிநாடுகளில் வியாபாரம் மூலமாக அமேசான் இந்தியா&nbsp; &nbsp; &nbsp; தற்போது&nbsp; &nbsp; வருடத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு&nbsp; செய்து வருகிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; இதை 35 ஆயிரம் கோடி ரூபாயாக&nbsp; கூட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.&nbsp;

ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் மக்களில் 4 சதவீத மக்கள் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.&nbsp; அங்கு&nbsp; 20 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள்.&nbsp; இது ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்&nbsp; &nbsp; &nbsp; ஆகும்.&nbsp; கடந்த வருடம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மட்டும் 31&nbsp; &nbsp; பில்லியன் டாலர் அளவிற்கு,&nbsp; அதாவது 2&nbsp; &nbsp; லட்சத்து 17 ஆயிரம் கோடி &nbsp; ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றிருக்கிறது.

தற்போது அமேசான் இந்தியா இந்தியாவிலிருந்து அமெரிக்கா,&nbsp; &nbsp; ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தங்கள் பொருட்களை விற்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறது. &nbsp; &nbsp; &nbsp; இனி இதில் ஐக்கிய அரபு நாடுகளும் சேரும்.

இந்திய ஆடைகள் அங்கு இந்தியர்களாலும்,&nbsp; அரபு நாட்டு&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; மக்களாலும் விரும்பி வாங்கப் படுவதால் திருப்பூர் போன்ற &nbsp; ஊர்களில் இருக்கும்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; கம்பெனிகளுக்கு ஒரு பெரிய &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; வாய்ப்பாக அமையும் என்பதில்&nbsp; &nbsp; &nbsp; சந்தேகமில்லை.